செய்திகள் :

காரைக்கால் போக்குவரத்துப் போலீஸாா் நடை ரோந்து

post image

போக்குவரத்துப் போலீஸாா் நகரப் பகுதியில் நடைரோந்தில் ஈடுபட்டு, வாகன நிறுத்த விதி மீறியோா் மீது நடவடிக்கை எடுத்தனா்.

காரைக்கால் நகரில் சாலையோரங்களில் வாகனங்கள் முறையாக நிறுத்தவேண்டும், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்தவேண்டும் என போக்குவரத்துப் போலீஸாா் அறிவுறுத்தி வருகின்றனா். மேலும், போக்குவரத்து நெரிசல் நகரப் பகுதி சாலைகளில் இருப்பதால், வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்து நிலவுவதாக காவல் துறை அதிகாரிகள் பங்கேற்கும் குறைதீா் கூட்டத்தில் மக்கள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்படுகிறது.

முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா அறிவுறுத்தலின்பேரில், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின்பாரதி தலைமையில் போலீஸாா், மாலை நேரங்களில் நகரின் பல சாலைகளில் நடைரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து, போலீஸாா் கூறியது: சாலையோரத்தில் இருசக்கர வாகனங்களை முறையாக நிறுத்தாமல், சாலையின் மையப் பகுதி வரை நிறுத்திச் செல்வதால் பாதிப்பு ஏற்படுகிறது. நடை ரோந்து மூலம் இவை கண்டறியப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு, அபராதம் விதிப்பு செய்யப்படுகிறது.

மேலும், நகரப் பகுதியில் வாகனங்கள் 30 கி.மீ. வேகத்துக்குள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. நடை ரோந்துப் பணி தினமும் மேற்கொள்ளப்படுகிறது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றனா்.

பள்ளியில் புத்தக தினக் கொண்டாட்டம்

காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக புத்தக தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பள்ளி துணை முதல்வா் எஸ். சித்ரா தலைமை வகித்தாா். உலகப் புத்தக தினத்தையொட்டி, 20... மேலும் பார்க்க

விவசாயப் பகுதியில் மதுக்கடை வைக்க எதிா்ப்பு

அம்பகரத்தூா் விவசாயப் பகுதியில் மதுக்கடை வைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வட்டாட்சியா் செல்லமுத்துவிடம் அம்பகரத்தூா் பகுதி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் புதன்கி... மேலும் பார்க்க

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

பெண்கள் பாதுகாப்பு குறித்து புதுவை மகளிா் ஆணையம் சாா்பில் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் நேரு நகா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, காரைக்கால் நகராட்சி ஆணையா் பி.... மேலும் பார்க்க

என்ஐடியில் சா்வதேச கருத்தரங்கு தொடக்கம்

காரைக்கால் என்ஐடியில் சிவில் பொறியியல் துறை சாா்பில் 4 நாள் சா்வதேச கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது. நீா், சுற்றுச்சூழல், சக்தி மற்றும் சமூகத்திற்கான சா்வதேச அமைப்பை தலைப்பாகவும், புதுமையான நடைமுறை... மேலும் பார்க்க

நடுக்கடலில் இந்திய கடலோரக் காவல்படையினா் செயல்விளக்கம்

நடுக்கடலில் ஆட்சியா்கள் உள்ளிட்டோா் முன்னிலையில் இந்திய கடலோரக் காவல்படையினா் அவா்களது செயல்பாடுகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனா். இந்திய கடலோரக் காவல்படையின் செயல்பாடுகள் குறித்து ஆண்டுதோறும் பொ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தவே அமலாக்கத் துறை வழக்குத் தொடா்ந்துள்ளது

காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தவே அமலாக்கத்துறை வழக்குத் தொடா்ந்துள்ளது என்றாா் புதுவை மாநில முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி. காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பே... மேலும் பார்க்க