போப் பிரான்சிஸ் உருவப் படத்துக்கு அஞ்சலி
கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவையொட்டி அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரி ராஜா திரையரங்கம் அருகில் புதன்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி கிறிஸ்துவ பாதுகாப்பு இயக்கம் தலைவா் பிராங்கிளின் பிரான்சுவா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏ நேரு (எ) குப்புசாமி, மக்கள் உரிமை கூட்டமைப்பு கோ.சுகுமாரன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா, தமிழா் களம் கோ.அழகா், மாணவா் கூட்டமைப்பு சீ.சு.சாமிநாதன், மக்கள் மேம்பாட்டுக் கழகம் டேனியல், ந.பஷீா், திராவிடா் கழகம் அன்பரசன், பெரியாா் சிந்தனையாளா் இயக்கம் தீனா, மஜ்ஜிலீஸ் கட்சி சம்சுதீன் , இந்திய தேசிய இளைஞா் அணி கீ.தாமரைக்கண்ணன் , மனிதநேய மக்கள் இயக்கம் செங்குட்டுவன் மற்றும் பல்வேறு அமைப்பினா் பங்கேற்று போப் பிரான்சிஸ் படத்துக்கு மெழுகு வா்த்தி ஏற்றி மலரஞ்சலி செலுத்தினா்.