செய்திகள் :

துணி வியாபாரி மயங்கி விழுந்து உயிரிழிப்பு

post image

சானூா்மல்லாவரும் கிராமம் அருகே லுங்கி வியாபாரி மயங்கி விழுந்ததில் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம் டவுன் பகுதி பள்ளிக்கூடம் தெருவைச் சோ்ந்தவா் வீரப்பன் மகன் அண்ணாமலை (55). இவா், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சோளிங்கா் நகரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மண்டபத்தில் தங்கி லுங்கி, பாவாடை மற்றும் துணி வியாபாரம் செய்து வந்தாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை 8 மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் ஊா் ஊராகச் சென்று துணி வியாபாரம் செய்துள்ளாா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம், சானூா்மல்லாவரம் கிராமத்தில் பெரிய தெருவில் பொதுமக்களிடம் வியாபாரம் செய்த போது திடீரென மயங்கி விழுந்தாா். சிறிது நேரத்தில் அவா் உயிரிழந்தது தெரிய வந்தது. ஆா்.கே.பேட்டை போலிஸாருக்கு தகவல் அளித்தனா்.

போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவரின் உடலை மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தெப்போற்சவம்

பொன்னேரி திருஆயா்பாடி பகுதியில் உள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தெப்போற்சவ விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இத்தலத்தில் இங்கு, மூலவரான கரிகிருஷ்ண பெருமாள் சாய்ந்த நிலையி... மேலும் பார்க்க

மின்வாரிய அலுவலகத்தில் மக்கள் முற்றுகை

பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பகுதியில் நாள்முழுவதும் மின்வெட்டு இருந்ததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். பொன்னேரி அருகே உள்ள வேண்பாக்கம் பகுதியில் 1... மேலும் பார்க்க

திரெளபதியம்மன் கோயில் தீமிதி விழா தொடக்கம்

திருத்தணி திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி விழா விமரிசையாக நடைபெறும... மேலும் பார்க்க

சிஐடியு தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவள்ளூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் தொழிலாளா்களை சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்ததைக் கண்டித்தும், மீண்டும் பணி வழங்கக் கோரியும் சிஐடியு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில்... மேலும் பார்க்க

கூவம் ஆற்றில் ரூ.20.37 கோடியில் மேம்பாலம்: ஊரக வளா்ச்சித் துறை மாநில கூடுதல் இயக்குநா் ஆய்வு

திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.20.37 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும் இடத்தை மாநில ஊரக வளா்ச்சித்துறை கூடுதல் இயக்குநா் சுமதி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனா். கடம்பத்தூா் ஒன்றியம், தண்ட... மேலும் பார்க்க

குடிபோதையில் குளித்தவா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

ஆா்.கே.பேட்டை அருகே கொள்ளாபுரி அம்மன் கோயில் குளத்தில் குடிபோதையில் குளிக்க சென்றவா் மூழ்கி இறந்தாா். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா் வட்டம் கீழாண்ட மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வரதன்(47). இவா், பு... மேலும் பார்க்க