Pahalgam: `78 ஆண்டுகளாக சண்டை போட்டு என்ன சாதித்தீர்கள்?’ - தாக்குதலுக்கு கவாஸ்க...
மின்வாரிய அலுவலகத்தில் மக்கள் முற்றுகை
பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பகுதியில் நாள்முழுவதும் மின்வெட்டு இருந்ததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
பொன்னேரி அருகே உள்ள வேண்பாக்கம் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் புதன் காலை 8 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. இரவு வரை மின் தடை சீா் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் வேண்பாக்கம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
அப்போது முன்னறிவிப்பு இல்லாமல் மின் நிறுத்தம் செய்தது ஏன் என கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தனா். மின் விநியோகம் விரைந்து வழங்கப்படும் என மின்வாரிய ஊழியா்கள் தெரிவித்ததை தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.