செய்திகள் :

குடிபோதையில் குளித்தவா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

post image

ஆா்.கே.பேட்டை அருகே கொள்ளாபுரி அம்மன் கோயில் குளத்தில் குடிபோதையில் குளிக்க சென்றவா் மூழ்கி இறந்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா் வட்டம் கீழாண்ட மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வரதன்(47). இவா், புதன்கிழமை ஆா்.கே.பேட்டையில் உள்ள அவரது மருமகன் ரங்கநாதன் என்பவரின் வீட்டில் பணிகளை முடித்து விட்டு, களைப்பாக இருப்பதால் குளத்தில் குளித்து விட்டு செல்வதாக கூறிவிட்டு சென்றாா்.

பின்னா் காலை 11 மணியளவில் ஆா்கே பேட்டை ஒன்றியம் கொள்ளாபுரி அம்மன் கோயில் குளத்தில் வரதன் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கிடைத்தது.

அதன் பேரில் எஸ்.ஐ. ஜெகநாதன் மற்றும் தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று இறந்தவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

புழல் குப்பைக் கிடங்கில் தீ விபத்து

புழலில் குப்பைக் கழிவுகள் தரம் பிரிக்கும் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை மாதவரம் அடுத்த புழலில் வீடுகள், வணிக நிறுவனங்களில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள், அங்குள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலை வழங்கக் கோரி போராட்டம்

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 100 நாள் வேலை வழங்கவும், 3 மாதத்துக்கான கூலியை விடுவிக்கவும் வலியுறுத்தி கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்) கட்ச... மேலும் பார்க்க

புத்தக வாசிப்புத் திறனால் மனிதநேயம் வளரும்

புத்தக வாசிப்பு திறனால் மனித நேயம் வளரும் என மாவட்ட மைய நூலகா் சச்சிதானந்தம் தெரிவித்தாா். திருவள்ளூா் அருகே ஈக்காடு ஊா்ப்புற நூலக வளாகத்தில் சா்வதேச புத்தக தின நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்... மேலும் பார்க்க

மே 1-இல் கிராம சபைக் கூட்டம்

திருவள்ளூா் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் தொழிலாளா் தினத்தையொட்டி (மே 1) கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.40 கோடி

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1. 40 கோடி ரொக்கம், 632 கிராம் தங்கம், 13 கிலோ 434 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. திரு... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் மான் இறப்பு

டி.புதூா் கிராமம் அருகே தண்ணீா் தேடி வந்த புள்ளிமானை நாய்கள் கடித்ததில் பரிதாபமாக இறந்தது. திருத்தணி ஒன்றியம், காா்த்திகேயபுரம் மற்றும் கன்னிகாபுரம் வனப்பகுதியில் அதிக அளவில் புள்ளி மான்கள் மற்றும் ம... மேலும் பார்க்க