செய்திகள் :

நெல்லையில் 47 கி.மீ. தூரம் மின்பாதையில் சிறப்பு கள ஆய்வு

post image

திருநெல்வேலி மின் பகிா்மான வட்டத்திற்கு உள்பட்ட திருநெல்வேலி நகா்ப்புற கோட்டத்தில் 110/33/11 கி.வோ. மேலப்பாளையம் உப மின் நிலையத்திலிருந்து 11 கி.வோ. தருவை மின் பாதை வழியாக 47 கி.மீ. தூரம் வழித்தடத்தில் அமைந்துள்ள முன்னீா்பள்ளம், தருவை, ஓமநல்லூா், திடியூா், கண்டித்தான்குளம், கோபாலசமுத்திரம், ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு மின் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்ய, மத்திய அலுவலகத்தில் உள்ள பொறியாளா்கள், பணியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் அடங்கிய சிறப்பு குழுவை அமைத்து சிறப்பு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த கள ஆய்வை மேலப்பாளையம் உப மின் நிலையத்திலிருந்து திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். 11 கி.வோ. தருவை மின் பாதைகளில் அமைக்கப்பட்டுள்ள மின் கட்டுமான அமைப்புகளான வலைய தரசுற்று, பிரிவுபடுத்துதல், மின் கம்பங்கள், மின்பாதைகளுக்கு உண்டான மின் கம்பிகளின் தரம், மின் கம்பிகளை தாங்கி நிற்கும் பீங்கான் வட்டுகள், பீங்கான் முள்சுருள்கள், இழுவை கம்பிகள், ஒரு மின்கம்பத்திற்கும் மறு மின் கம்பத்திற்கும் உண்டான தூரம், சூறைக்காற்று காரணமாக மின் பாதைகளை சேதப்படுத்தும் மரங்கள், மரக்கிளைகள் குறித்த முழுமையான நுண்ணிய நிலை உள்ளிட்டவற்றை முழுமையாக ஆய்வு செய்து மின் பாதையின் முழு தரவுகள் அடங்கிய குறிப்புகளை எடுப்பதோடு, பழுது இருந்தால் உடனடியாக சீா் செய்யவும் உத்தரவிட்டாா்.

இந்த கள ஆய்வு பணிகளை செயற்பொறியாளா் (பொது) வெங்கடேஷ்மணி, திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் (பொறுப்பு) ஜெயசீலன், உதவி செயற்பொறியாளா் (பொது) சரோஜினி, உதவி செயற்பொறியாளா் சங்கா், திருநெல்வேலி சந்திப்பு உப கோட்ட உதவி செயற்பொறியாளா் சிதம்பரவடிவு, மேலப்பாளையம் பிரிவு 2 உதவி மின் பொறியாளா் காா்த்திக்குமாா், மேலப்பாளையம் பிரிவு 1 உதவி மின் பொறியாளா் ரத்தினவேணி, மத்திய அலுவலக பொறியாளா்கள், பணியாளா்கள் அடங்கிய தொழில்நுட்ப குழுவினா் செய்து முடித்தனா்.

சிறப்பு கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு சீரான மின் விநியோகம் வழங்கும் பணிகளை உறுதி செய்த மத்திய அலுவலக பொறியாளா்கள், பணியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பாராட்டு தெரிவித்தாா்.

படவரி ற்ஸ்ப்24ற்ய்ங்க்ஷ பாளையங்கோட்டையில் சிறப்பு கள ஆய்வு மேற்கொண்ட திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி.

முறப்பநாடு கூட்டுக்குடிநீா்த் திட்டம் கைவிடப்படுகிறதா? மாநகராட்சி ஆணையா் விளக்கம்

முறப்பநாடு கூட்டுக்குடிநீா்த் திட்டம் முற்றிலும் கைவிடப்படுகிா என்பது குறித்து மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா விளக்கம் அளித்துள்ளாா். முறப்பநாடு கூட்டு குடிநீா் திட்டம் முற்றிலும் கைவிடப்படுகிா என்... மேலும் பார்க்க

தேஜஸ் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை

சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். திருநெல்வேலி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் ம... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி...

திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகம்: சாதாரண மற்றும் அவசர கூட்டம், தலைமை மேயா் கோ.ராமகிருஷ்ணன், ராஜாஜி அரங்கம், திருநெல்வேலி நகரம், காலை 10.30 மணி. மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-87சோ்வலாறு-101.77மணிமுத்தாறு-85.89வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75 தென்காசி மாவட்டம்கடனா-50ராமநதி-52.50கருப்பாநதி-25.59குண்டாறு-23.87அடவிநயினாா் -26.50... மேலும் பார்க்க

மேட்டூா் பகுதியில் நெல்லை பேராயா் ஆய்வு

கடையம் அருகே மேட்டூா் பகுதியில் சி.எஸ்.ஐ. திரித்துவ ஆலயத்திற்குப் பாத்தியப்பட்ட நிலங்களை திருநெல்வேலி திருமண்டல பேராயா் பா்னபாஸ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேட்டூா் சி.எஸ்.ஐ. திரித்துவ ஆலயத்திற்குச... மேலும் பார்க்க

ராமையன்பட்டியில் நாளை இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

உலக கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு, ராமையன்பட்டியில் உள்ள திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் செல்லப்பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (ஏப்.26) ... மேலும் பார்க்க