நெல் ரகங்கள் ஊக்குவித்தல்: விவசாயிகளுக்குப் பயிற்சி
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரம், கோடகநல்லூரில் விவசாயிகளுக்கு நெல் ரகங்கள் ஊக்குவித்தல் பயிற்சி முகாம் நடைபெற்றது.
பாப்பாக்குடி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ், பாரம்பரிய நெல் ரகங்களை ஊக்குவித்தல், பயிரிடுதல் என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமுக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன் தலைமை வகித்தாா். ஊராட்சி துணைத் தலைவா் முருகன் முன்னிலை வகித்தாா்.
முகாமில், பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடுவதன் அவசியம், அதற்கான மானியத் திட்டங்கள், பசுந்தாள் உரப்பயிா் சாகுபடியின் முக்கியத்துவம், பசுந்தாள் உரப்பயிா் மானியத் திட்டங்கள், பசுந்தாள் உர விதைகள் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக முன்னோடி விவசாயி அம்பை சங்கரநாராயணன் கலந்துகொண்டு பேசினாா். வட்டார வேளாண் அலுவலா் முத்துராஜா, துணை அலுவலா் சுரேஷ்குமாா் ஆகியோா் நெல் சாகுபடியில் சிங் சல்பேட் இடுவதன் அவசியம், மானியத் திட்டங்கள், உழவன் செயலி பயன்பாடு குறித்து விளக்கினாா். உதவி வேளாண் அலுவலா் ஜோதிமுத்து, விவசாயிகள், வேளாண் துறையினா் கலந்துகொண்டனா். உதவி தொழில்நுட்ப மேலாளா் ராஜாமணி நன்றி கூறினாா்.