டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பின் ‘அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்...
காஷ்மீா் தாக்குதல்: நெல்லையில் 3-ஆவது நாளாக தீவிர கண்காணிப்பு
காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் காரணமாக, திருநெல்வேலி மாநகரம் மற்றும் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் 3-ஆவது நாளாக போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
காஷ்மீரில் கடந்த 22-ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 போ் உரியிழந்தனா். இதனையடுத்து தமிழகத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி திருநெல்வேலி சரக டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி உத்தரவின்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகரில் போலீஸாா் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனா். திருநெல்வேலி மாநகரம் உள்பட திருநெல்வேலி சரகத்துக்குள்பட்ட அனைத்துச் சோதனைச் சாவடிகளிலும் போலீஸாா் தொடா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மேலும் கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரி இஸ்ரோ மையம், தூத்துக்குடி துறைமுகம் மற்றும் அனல்மின்நிலையம், முக்கிய வழிபாட்டுத் தலங்கள், பேருந்து-ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களில் கூடுதல் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.