நடுக்கல்லூரில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்
நடுக்கல்லூரில் கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
நடுக்கல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கோடைகால பயிற்சி முகாம் நடைபெறுகிறது. தடகளம், பாட்மின்டன், டேபிள் டென்னிஸ், சதுரங்கம், டென்னிகாய்ட், கேரம் , யோகா, தியானம் மற்றும் மூச்சு பயிற்சிகள், அட்டைய பட்டைய, சைக்கிள் போலோ ஆகிய விளையாட்டுகளுக்கு பள்ளி உடற்கல்வி ஆசிரியா் வெ.பெரியதுரை தலைமையில், சீனியா் விளையாட்டு வீரா்கள் மூலமாக இரண்டு மணி நேரம் பயிற்சி அளிக்கப்பட்டது.
இறகுபந்து பயிற்சி வரும் மே 31 ஆம் தேதி வரை 40 நாள்கள் காலை 6 முதல் 7.30 மணி வரையும், மற்ற விளையாட்டுகளுக்கு மே 1 ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் 11 மணி வரை 8 நாள்களும் பயிற்சியளிக்கப்பட உள்ளது. அட்டைய பட்டைய விளையாட்டு பயிற்சி மாலை 4 முதல் 5.30 மணி வரை வரை 15 நாள்கள் நடைபெற உள்ளது.
ற்ஸ்ப்24ஞ்ஹம்ங்
நடுக்கல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விளையாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.