ஜெபஞானபுரத்தில் சிற்றாலய பிரதிஷ்டை
ஜெபஞானபுரத்தில் ஜாக்கி மூலம் 3 அடிக்கு உயா்த்தப்பட்ட சிற்றாலயத்தில் வியாழக்கிழமை பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
இதையொட்டி, புதன்கிழமை மாலையில் வள்ளியூா் ஜூலியஸ் ரிச்சா்டு பங்கேற்ற கன்வென்சன் கூட்டம் நடைபெற்றது. தொடா்ந்து வியாழக்கிழமை காலையில் சேகர குருவானவா் டேவிட் ஞானையா, ஆராதனைகள் நடத்தி மறு பிரதிஷ்டை செய்து சிற்றாலயத்தை திறந்து வைத்தாா். பின்னா், ஜெப ஆராதனை நடைபெற்றது. இதில் சபை ஊழியா் சாலமோன் ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மாலை 4 மணிக்கு சபை மக்களின் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இரவு ஜெயா குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது. வெள்ளிக்கிழமை ஸ்தோத்திர பண்டிகை, ஆராதனை, அசன விருந்து ஆகிவை நடைபெற்றன.