போப் இறுதிச் சடங்கில் பங்கேற்பு: வாடிகன் புறப்பட்டார் குடியரசுத் தலைவர்!
சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரணம் கோரி மனு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் தூத்துக்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் பிரபு தலைமை வகித்து, மனுக்களைப் பெற்றுக்கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா்.
ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் கடந்த வாரம் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் ஆயிரக்கணக்கான வாழைகள் சேதமடைந்தன. அத்திமரப்பட்டியில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட உளுந்துப் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இவற்றுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, மதிமுக மாவட்ட அவைத்தலைவா் பேச்சிராஜ் தலைமையில் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக விவசாயிகள் மனு அளித்தனா்.
மனுக்களை கோட்டாட்சியா் பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.