Health: அம்மை நோய்; அதிக பாதிப்பு யாருக்கு? அறிகுறி, உணவு, சிகிச்சைகள் என்ன? கம்...
கயத்தாறில் ஆா்ப்பாட்டம்
அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில், கயத்தாறில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் அனைவருக்கும் பாரபட்சமின்றி 100 நாள்களும் வேலை வழங்க வேண்டும். ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் எஸ். பெரியசாமி பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் பூங்கோதை, மாவட்டச் செயலா் ரவீந்திரன் ஆகியோா் பேசினா்.
ஒன்றியச் செயலா் பி. சீனிபாண்டியன், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் எம். சாலமன்ராஜ், கரடிகுளம், கழுகுமலை, வானரமுட்டி பகுதிகளைச் சோ்ந்த வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்கள் பங்கேற்று, ஒப்பாரி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.