செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: ஜி20 நாடுகளின் தூதரக அதிகாரிளுக்கு மத்திய அரசு விளக்கம்!

post image

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக சீனா, கனடா உள்ளிட்ட ஜி20 நாடுகளின் தூதர்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று விளக்கமளித்தது.

ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில் ஏப்.22 (செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் அதுதொடர்பாக பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெய்சங்கர், தாக்குதல் தொடர்பாக விளக்கமளித்துள்ளனர்.

தொடர்ந்து பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து சீனா, கனடா உள்ளிட்ட ஜி20 நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று விளக்கமளித்தது.

வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகத்தில் சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தக் கூட்டத்தில் ஜெர்மனி, ஜப்பான், போலந்து, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதர்கள் கலந்து கொண்டனர்.

பஹல்காம் தாக்குதலும் அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் பிற நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |கராச்சியில் நேரு, அயூப் கையெழுத்திட்ட சிந்து நதி உடன்பாடு! நேருவை வரவேற்ற லட்சம் பேர்!

பஹல்காம் தாக்குதல்: மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவு பெற்றது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதிக்க, தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தத... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் செல்கிறார் ராகுல்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி நாளை(ஏப்.25) ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்குச் செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இந்து கோயில்களில் முஸ்லிம் பணிபுரியத் தடை!

உத்தரப் பிரதேசத்தில் கோயில் கட்டுமானப் பணியில் இருந்த முஸ்லிம்களை கோயில் நிர்வாகத்தினர் பணிநீக்கம் செய்தனர்.உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸில் உள்ள இந்து கோயிலின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த இரண்டு ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி!

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு நிவாரண நிதியுதவி அறிவித்து அஸ்ஸாம் முதல்வர் உத்தரவிட்டார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான 26 பேரின் குடும்பங்களுக்கும... மேலும் பார்க்க

ரூ.7 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் தம்பதி சரண்!

சத்தீஸ்கரின் கபிர்தம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் தம்பதி சரணடைந்துள்ளனர்.மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தோ... மேலும் பார்க்க

இந்திய வீரரை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவம்!

பாகிஸ்தானின் ஜலோக் தோனா என்ற பகுதிக்கு தவறுதலாகச் சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைப் பிடித்து வைத்துள்ளனர். கொல்கத்தாவைச் சேர்ந்தவரான இந்திய பாதுகாப்புப் படை வீரர் பி.க... மேலும் பார்க்க