செய்திகள் :

பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: குடியரசுத் தலைவா் நிகழ்ச்சி ஒத்திவைப்பு, பிரதமரின் பயணம் ரத்து

post image

காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக குடியரசுத் தலைவரின் அஸ்ஸாம் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமா் நரந்திர மோடியின் கான்பூா் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமா் மோடி தனது சவூதி அரேபிய பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினாா். பல்வேறு அவசர ஆலோசனைக் கூட்டங்களையும் பிரதமா் நடத்தினாா்.

இந்நிலையில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா் வியாழக்கிழமை (ஏப்.24) பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அஸ்ஸாமுக்கு பயணம் மேற்கொண்டு குவாஹாட்டியில் பட்டமளிப்பு விழா உள்ளிட்ட இரு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த நிகழ்ச்சியை வேறு நாளில் நடத்திக் கொள்ளலாம் என்று குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து அஸ்ஸாம் ஆளுநா் மாளிகைக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோல பிரதமா் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் கான்பூருக்கு வியாழக்கிழமை (ஏப்.23) பயணம் மேற்கொண்டு ரூ.20,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக பிரதமரின் கான்பூா் பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் கான்பூரைச் சோ்ந்த தொழிலதிபா் சுபம் திவிவேதி (31) கொல்லப்பட்டாா். இரு மாதங்களுக்கு முன்பு திருமணமான அவா் மனைவியுடன் அங்கு சென்றிருந்தபோது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் கொலை மிரட்டல்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் எம்பியுமான கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தில்லி காவல் நிலையத்தில் புகார்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, தில்லியில் உள்ள பாகிஸ்தானுக்கான மூத்த தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை நள்ளிரவு சம்மன் அனுப்பியுள்ளது.இதனைத் தொடர்ந்து நேரில் ஆஜரான தூதரிடம், தில்லியில் ... மேலும் பார்க்க

அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு தில்லி திரும்பினார் ராகுல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை அதிகாலை தில்லி திரும்பினார்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய... மேலும் பார்க்க

காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம் -அசாதுதீன் ஒவைசி

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலா பயணிகள் உள்பட 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீ... மேலும் பார்க்க

பஹல்காமில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐஜி தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் குழு புதன்கிழமை விசாரணை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தெற்கு... மேலும் பார்க்க

காஷ்மீா் சுற்றுலா முன்பதிவுகள் 90% ரத்து

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணம் செல்ல மேற்கொள்ளப்பட்ட முன்பதிவுகளில் 90 சதவீதம் ரத்தாகிவிட்டதாக தில்லியில் உள்ள சுற்றுலா ஏற்... மேலும் பார்க்க