கமலுடன் காங்கிரஸ் நிா்வாகிகள் சந்திப்பு
மக்கள் நீதி மய்யம் தலைவா் கமலஹாசனுடன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தலைமையிலான நிா்வாகிகள் புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.
சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள மநீம அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தச் சந்திப்பின்போது, நான்குநேரி சட்டப்பேரவை உறுப்பினா் ரூபி மனோகரன், மநீம பொதுச் செயலா் ஆ.அருணாசலம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.