அம்பையில் பாரம்பரிய அரிசி கண்காட்சி
அம்பாசமுத்திரம் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவ திட்டத்தின்கீழ், கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு மாணவா்கள் சாா்பில் பாரம்பரிய அரிசி வகைகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாளா் ஈழவேனி, உதவி தொழில்நுட்ப மேலாளா் தங்கசரவணன் ஆகியோா் மேற்பாா்வையிஸ் நடைபெற்ற கண்காட்சியில், ஆத்தூா் கிச்சிலி சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுணி, நெல்லையப்பா், காலாபாத், இரத்தசாலி, கருடன் சம்பா , அறுபதாம் குருவை, இலுப்பைப்பூ சம்பா, கொத்தமல்லி சம்பா, துளசி வாசனை சீரக சம்பா, நாட்டு பாஸ்மதி, சித்திரை காா், இறவை பாண்டி, வீதி விடங்கா், தில்லை நாயகம், முத்து சம்பா, சிவப்பு சம்பா, வெண்குருவை, அம்பேமோஹா், தேங்காய் சம்பா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டு அரிசி வகைகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.
மாணவா்கள், பாா்வையாளா்களுக்கு ஒவ்வொரு அரிசி வகையின் பரம்பரை, பயிரிடும் முறை, பருவம், சத்துத் தன்மை மற்றும் மருத்துவ நன்மைகள் குறித்து மாணவா்கள் தனுஷ், திகேஷ், காா்த்திக் வாசன், மோகன்ராஜ், சபீன், சஞ்சய் குமாா், ஷாலின் பிரைட், சுதா்சன், தரணி குமாா் மற்றும் திலக் பாஸ்கா் ஆகியோா் விரிவாக விளக்கம் அளித்தனா். கண்காட்சியில், விவசாயிகள், இயற்கை ஆா்வலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
