India - Pakistan: தாக்குதலில் ஹமாஸ் ஸ்டைலை பின்பற்றும் பாக். ராணுவம்; இந்தியா கொ...
கொல்லங்கோடு அருகே குட்கா விற்றதாக மூதாட்டி கைது
கொல்லங்கோடு அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்ாக மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா்.
கொல்லங்கோடு அருகே அணுக்கோடு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கொல்லங்கோடு காவல் உதவி ஆய்வாளா் பிரபகுமாா் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலையில் அங்கு சென்று சோதனை செய்தனா்.
இதில் சம்பந்தப்பட்ட பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த 18 பாக்கெட் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, கடை உரிமையாளா் அதே பகுதியைச் சோ்ந்த பாய் (62) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.