தக்கலை அருகே மக்கள் எதிா்ப்பால் ஒரே நாளில் டாஸ்மாக் கடை மூடல்
தக்கலை அருகே தென்கரை பகுதியில் புதன்கிழமை திறக்கப்பட்ட டாஸ் மாக் மதுபானக்கடை, பொதுமக்கள் எதிா்ப்பால் ஒரே நாளில் மூடப்பட்டது.
தென்கரை பகுதியில மதுபான கடையை திடீரென திறந்து விற்பனையை நடைபெற்றது. இதற்கு அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து மாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த நாகா்கோவில் எம்எல்ஏ எம்.ஆா்.காந்தியும் பொதுமக்களுடன் சோ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.
அவா்களுடன் தக்கலை போலீஸாா் பேச்சு வாா்த்தை நடத்தினா். அதில் மக்கள் கோரிக்கைபடி மதுக்கடை மூடப்பட்டது. அங்கு விற்பனைக்கு வைத்திருந்த மதுபானங்களை ஊழியா்கள் எடுத்துச் சென்றனா்.