கனிமவளம் கடத்திய லாரி பறிமுதல்
தக்கலை அருகே தோட்டியோடு பகுதியில் போலி அனுமதி சான்றுடன் கனிமவளம் கடத்திய லாரியை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்ட கனிம வள அலுவலா் கிஷோா் தலைமையில் அதிகாரிகள் குழுவினா், தோட்டியோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்த போது திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து அனுமதியோடு கொண்டு வந்த கனிமவளத்தை இறக்கிவிட்டு, அதே பதிவு அனுமதியில் தோட்டியோட்டிலிருந்து அடுத்த சுமை அரசின் அனுமதி இல்லாமல் கொண்டு செல்வது தெரியவந்தது. விசாரணை நடத்திய அதிகாரிகள், லாரியையும், ஓட்டுநா் கோசல்ராஜ் ( 36) என்பவரையும் இரணியல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டா் செந்தில்வேல்குமாா், லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநா் கோசல்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டாா்.