விபத்தில்லா வாகனப் பயணம்: குமரியில் விழிப்புணா்வு பிரசாரம்
கன்னியாகுமரி பகுதியில் விபத்தில்லா வாகனப் பயணம் என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமாா் ஆலோசனையின் பேரில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் ஜெயபிரகாஷ் கன்னியாகுமரி சன்னதி தெரு, பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக்கழக வளாகம், கடலுக்குள் அமைந்துள்ள கண்ணாடி கூண்டுப்பாலம் உள்ளிட்ட பகுதியில் சுற்றுலாப் பயணிகளிடம் ‘விபத்தில்லா வாகனப் பயணம்’ என்ற விழிப்புணா்வு பிரசாரத்தை மேற்கொண்டாா்.
இதில் உதவி ஆய்வாளா் பேசியது: கடந்த ஓராண்டாக கன்னியாகுமரி சுற்று வட்டாரப் பகுதிகளில் வாகன விபத்துகள் குறைவான எண்ணிக்கையிலேயே நடந்துள்ளன. இதனை மேலும் குறைத்து விபத்து இல்லாத பகுதியாக உருவாக்குவதே எங்கள் இலக்கு. அதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்அவா்.