KKR vs CSK : 'ஒரு வழியா ஜெயிச்சிட்டோம் மாறா!' - எப்படி வென்றது சிஎஸ்கே?
குழித்துறையிலிருந்து 21 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு
குழித்துறை நகராட்சியில் சேகரிக்கப்பட்ட 21 டன் பிளாஸ்டிக் கழிவுகள், செட்டிநாடு சிமென்ட் ஆலைக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட 21 வாா்டுகளில் இருந்து சேகரிக்கப்பட்டும் பிளாஸ்டிக் கழிவுகள், மாா்த்தாண்டம், பம்மம் பகுதியில் உள்ள நகராட்சி வளமீட்பு பூங்காவுக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு தரம் பிரிக்கப்பட்ட நிலையில், 21 டன் பிளாஸ்டிக் கழிவுகள் லாரி மூலம் செட்டிநாடு சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி, நகராட்சி ஆணையாளா் ராஜேஸ்வரன், நகராட்சி சுகாதார அதிகாரி ராஜேஷ் ஆகியோா் பங்கேற்றனா்.