செய்திகள் :

Doctor Vikatan: சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே பசி, அதிகம் சாப்பிடுகிறேனோ என்ற பயம்.. தீர்வு என்ன?

post image

Doctor Vikatan: என் வயது 45. தினமும் காலை உணவைத் தவிர்ப்பதில்லை. ஆனாலும், அடுத்த இரண்டு மணி நேரத்தில் பசிக்கிறது. எனவே, காபி, டீயுடன் பிஸ்கட், வடை என ஏதேனும் சாப்பிடுகிறேன். அதேபோல மதிய உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரத்தில் மீண்டும் பசிக்கிறது. பஜ்ஜி, போண்டா சாப்பிடும்படி ஆகிறது. என்னையும் அறியாமல் அதிகம் சாப்பிடுகிறேனோ என்று பயமாக இருக்கிறது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் பசி எடுப்பது ஏன்... இதை எப்படி சரிசெய்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை மற்றும் குடல் மருத்துவர் பாசுமணி

மருத்துவர் பாசுமணி

இந்தப் பிரச்னைக்கான அடிப்படை காரணத்தை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.  நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில்தான் இதற்கான பதில் இருக்கிறது. காலையில் இட்லி அல்லது தோசை, மதியம் சாதம் என சாப்பிடும்போது அது சீக்கிரமே செரிமானமாகி, சீக்கிரமே ரத்தச் சர்க்கரையாக மாறிவிடும்.

உதாரணத்துடன் விளக்கினால்  உங்களுக்கு இது எளிதில் புரியும். ஒரு பக்கம் மது பானங்களையும்,  இன்னொரு பக்கம் அரிசி, கோதுமை, சிறுதானியங்கள், உருளைக்கிழங்கு போன்றவற்றையும் வையுங்கள். மதுபானத்தில்  உள்ள ஸ்டார்ச்சும், அரிசி, கோதுமை, சிறுதானியம், உருளைக்கிழங்கு போன்றவற்றில் உள்ள ஸ்டார்ச்சும் ஒன்றுதான்.

அதாவது ஆல்கஹால் எடுக்கும்போது கல்லீரல் அதை எப்படி மதிக்குமோ, அப்படித்தான் இந்த அரிசி, கோதுமை, சிறுதானியங்கள், உருளைக்கிழங்கு சாப்பிடும்போதும் மதிக்கும். ஆல்கஹால் எப்படி கொழுப்பாக மாறுமோ, அதே போலத்தான் கார்போஹைட்ரேட்டும் கொழுப்பாக மாறும்.  

மதுபானத்தில் உள்ள ஸ்டார்ச்சும், அரிசி, கோதுமை, சிறுதானியம், உருளைக்கிழங்கு போன்றவற்றில் உள்ள ஸ்டார்ச்சும் ஒன்றுதான்.

புரதச்சத்து இல்லாமல் வெறும் கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டும் உட்கொள்ளும்போது அது உடனே ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

எப்போதுமே புரதச்சத்து சாப்பிட்டால் அப்படி ரத்தச் சர்க்கரையானது சட்டென ஏறாது. உதாரணத்துக்கு, 2 இட்லி சாப்பிடப் போகிறீர்கள் என்றால், முதலில் ஒரு வடை சாப்பிட்டுவிட்டு, அதன் மேல் இரண்டு இட்லி சாப்பிட்டால் அது ரத்தச் சர்க்கரையாக மாற சற்று நேரம் எடுக்கும். அதுவே நான்கு இட்லி சாப்பிட்டால் வெகு சீக்கிரமே ரத்தச் சர்க்கரை அளவு எகிறிவிடும். கஞ்சி மட்டும் சாப்பிடும்போதும் இப்படித்தான் நடக்கும். 

காலை 8 மணிக்கு இப்படி மாவுச்சத்துள்ள பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டால், நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி 10 மணி அளவில் கொலைப்பசி வரும். காரணம், சட்டென எகிறிய ரத்தச் சர்க்கரைதான்.

உடனே உடல் பதறிப்போய், 'பிஸ்கட் சாப்பிடு, டீ குடி' என சிக்னல் கொடுக்கும். சிலருக்கு உடல் நடுங்கும். களைத்துப்போகும்.  காலையில் சாப்பிட்ட கார்போஹைட்ரேட்தான் இந்த எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம்.

அது தெரியாமல் மறுபடி பிஸ்கட் வடிவில் இன்னொரு கார்போஹைட்ரேட்டை உடலுக்குக் கொடுத்தால் 12 மணிக்கு மீண்டும் பசி வரும்.  ஸ்டார்ச் உணவுகள் சாப்பிட்டால் அடுத்த ஒன்றரை, இரண்டு மணி நேரத்தில் இப்படித்தான் நிகழும். இப்படி நடக்காமலிருக்க  முதலில் புரதம், காய்கறிகள் சாப்பிட்டு, பிறகு ஸ்டார்ச் உணவுகளை அளவு குறைத்துச் சாப்பிடுவதுதான் சரியானது.

உடல் பதறிப்போய், 'பிஸ்கட் சாப்பிடு, டீ குடி' என சிக்னல் கொடுக்கும். சிலருக்கு உடல் நடுங்கும். களைத்துப்போகும்.

சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பே தண்ணீர் குடிக்க வேண்டும். ஒருகாலத்தில் உடலுழைப்பு அதிகமிருந்தது. அப்போது  அவர்கள் அதிக அளவு சோறு சாப்பிட்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் ஒல்லியாகவே  இருந்தார்கள்.

உடலுழைப்பே இல்லாத நாமும் அப்படிச் சாப்பிட்டால் அத்தனையும் போய் தொப்பையாகத்தான் உருவாகும். எனவே, நீங்கள் சாப்பிடுகிற முறையை கவனித்து அதில் தவறு இருப்பின் மாற்றுங்கள். புரதம் சாப்பிடுவதை உறுதிப்படுத்துங்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Health: சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடுகிறீர்களா? என்னவெல்லாம் பாதிப்புகள் வரும் தெரியுமா?

சரியான நேரத்துக்குச் சாப்பிடாமல் ஒத்திவைப்பது, தூங்காமல் இருப்பது பற்றிப் பார்த்திருக்கிறோம். சிறுநீர் கழித்தலை ஒத்திப்போடுகிறவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?இன்றைக்கு நகர்ப்புறங்களில் பொது ... மேலும் பார்க்க

Mayonnaise: `மையோனைஸை விற்க, வாங்க, சேமித்து வைக்க தடை...' - தமிழ்நாடு அரசு சொல்வது என்ன?

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் வெளிநாட்டு உணவுகள் மிகவும் விரும்பப்படுகிறது. குறிப்பாக தந்தூரி, பார்பிகியூ, சவர்மா எனப் பல்வேறு அரேபிய உணவுகளுக்கான கடைகள் வீதிகள்தோறும் இருக்கிறது. இந்த உண... மேலும் பார்க்க

Health: 20களில் கருத்தரித்தால்தான் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்குமா? மருத்துவர் சொல்வது என்ன?

உயர் கல்வி, வேலையில் அடுத்தகட்ட வளர்ச்சி, ஆன்சைட் என இந்தக் காலப் பெண்கள் தங்கள் கரியர் மீது மிகுந்த காதலுடன் இருக்கிறார்கள்.அதே காலகட்டத்தில் திருமணம், குழந்தை எனத் திட்டமிட்டால் அது தங்கள் கரியரில் ... மேலும் பார்க்க

தனியாக பேசுவது இயல்பா? மனநோயின் அறிகுறியா? - உளவியல் நிபுணர் எச்சரிப்பது என்ன?

நம்மில் பலருக்கு தனியாக பேசிக்கொள்ளும் பழக்கம் இருக்கும். ஒரு நாளில் என்னென்னவெல்லாம் நடந்தது என்று இரவில் தூங்கும் போது அதனை சிந்தித்துப் பார்ப்போம். பின்னர் அது குறித்து ஆழ்ந்த யோசித்து தங்களிடம் பே... மேலும் பார்க்க

Health: நாம் ஏன் தினமும் சரிவிகித உணவு சாப்பிட வேண்டும்? நிபுணர் சொல்லும் விளக்கம் இதான்!

சரிவிகித உணவு என்பது மனித உடலுக்குத் தேவையான அனைத்து அடிப்படைச் சத்துக்களையும் கொடுப்பதாகும். சரிவிகித உணவு மற்றும் அதன் நன்மைகள் குறித்தும், சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளாததால் வரும் விளைவுகள் குறித்... மேலும் பார்க்க

Health: அடிக்கடி கிரில்டு சிக்கன் சாப்பிடுறீங்களா? மருத்துவர் எச்சரிப்பது என்ன?

அசைவ உணவகங்களில் ஆவி பறக்க... சுடச்சுட... தட்டில் வைக்கப்படும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிற இறைச்சிகளின் சுவையும் நிறமும் நம்மைச் சுண்டி இழுக்கும்.தீயில் நேரடியாகச் சுட்டும், தந்தூரி அடுப்புகளில், தணலில... மேலும் பார்க்க