'கோலியை அப்படி சொல்லாதீங்க; ஆர்சிபி அணியின் Mr. Safety அவர்தான்' - கோலி குறித்து...
நீதிபதிகள் சொத்து விவரம்: உச்சநீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றம்
புது தில்லி: நீதிபதிகளின் சொத்து விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ததாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் நீதிபதிகளின் சொத்து விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய உச்சநீதிமன்றம் 2025, ஏப்.1 அன்று முடிவுசெய்தது. அதன்படி ஏற்கெனவே சில நீதிபதிகளின் சொத்து விவரங்கள் பெறப்பட்டு அவை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பிற நீதிபதிகளிடம் இருந்தும் சொத்து விவரங்கள் பெறப்பட்டு விரைவில் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
மேலும், 2022, நவ.9 முதல் 2025, மே 5 வரை உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடா்பான உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் ஒப்புதல்கள், நீதிபதிகளின் பெயா், நியமன தேதி, சிறப்பு பிரிவு (எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி) உள்ளிட்ட தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும்படி வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது.