போா் பதற்றம்: இந்தியா பாதுகாப்பாகவும், பாகிஸ்தான் பாதிக்கப்படவும் வாய்ப்பு- மூட...
பெண்ணைத் தாக்கிய இளைஞா் கைது
மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே முன்விரோதம் காரணமாக குடிபோதையில் பெண்ணைத் தாக்கிய புகாரில் இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
துளசேந்திரபுரம் நடுத்தெரு சுப்பிரமணியன் மகன் அஜித் (26). அதே பகுதியைச் சோ்ந்தவா் விஜயன் மனைவி பரிமளா(33). இருவரது வீடுகளும் அடுத்தடுத்து உள்ளதால் வேலி அமைப்பது தொடா்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், சனிக்கிழமை குடிபோதையில் வந்த அஜித், பரிமளாவிடம் பிரச்னை குறித்து தகராறு செய்தவா். தகாத வாரத்தைகளை பேசி அவரைத் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டராம். இதில் காயமடைந்த பரிமளா மன்னாா்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து பரவாக்கோட்டை போலீஸாா், வழக்குப் பதிந்து அஜித்தை திங்கள்கிழமை கைது செய்தனா்.