கட்டுமானப் பணியின் போது கிடைத்த நடராஜா் சிலை: அதிகாரிகள் ஆய்வு
நடிகை பாலியல் வன்கொடுமை: பிரபல நடிகரைத் தீவிரமாகத் தேடி வரும் மும்பை போலீஸ்!
மும்பை: நடிகையொருவருக்கு சினிமாவில் வாய்ப்பளிப்பதாக வாக்குறுதியளித்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின்கீழ், நடிகர் ஏஜாஸ் கானை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஏஜாஸ் கானுக்கு சம்மன் காவல்துறையிடமிருந்து அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவரது அலைபேசி எண் மூலமாகவும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனையடுத்து அவரைக் கைது செய்து விசாரிக்க மும்பை காவல்துறை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதன்படி, தலைமறைவான நடிகர் ஏஜாஸ் கானை மும்பை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.