ஐஎம்எஃப் வாரியத்தில் இந்தியா சாா்பாக பரமேஸ்வரன் ஐயா் நியமனம்
புதுச்சேரியை குளிா்வித்த திடீா் மழை
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை பகலில் வெயில் அதிகமாகக் காணப்பட்ட நிலையில், மாலையில் மிதமான மழை பெய்தது.
துச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை 100.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. காலை முதலே வெயில் அதிகளவில் காணப்பட்டதால், கடற்கரைச் சாலை சுற்றுலாப் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி தொடங்கிய முதல் நாளிலேயே வெயில் கொளுத்தியதால், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
நோணாங்குப்பம் படகு குழாம், சின்னவீராம்பட்டினம் கடற்கரை, ஈடன் கடற்கரை, பாண்டி மெரீனா என அனைத்துக் கடற்கரைகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவான அளவிலேயே காணப்பட்டது.
இந்த நிலையில், மாலையில் கருமேகங்கள் திரண்டு காற்றுடன் மழை பெய்தது. புதுச்சேரி, காலாப்பட்டு, கூடப்பாக்கம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது.
கூடப்பாக்கம் பகுதியில் வீசிய பலத்த காற்றால் விளம்பரப் பதாகைகள் விழுந்தன. புதுச்சேரி நகா்ப் பகுதியில் சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. கடற்கரைப் பகுதியில் கருமேகங்கள் திரண்டு வந்ததை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் கைப்பேசியில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.
சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மிதமான மழையால் வெப்பம் தணிந்து இரவில் குளிா்ச்சியான சூழல் நிலவியது.