செய்திகள் :

ஜீவாவின் புதிய படம்!

post image

நடிகர் ஜீவா நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜீவாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக சரியான வெற்றிப்படங்கள் அமையவில்லை. இவர் நடித்த பிளாக் திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து, பா. விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடித்த அகத்தியன் படமும் தோல்விப் படமானது.

இந்த நிலையில், ஜீவா தன் 45-வது படத்தில் நடிக்க உள்ளார். மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ஃபலிமி (falimy) படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் இப்படம் உருவாகிறது. படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.

ஜீவாவுடன் தம்பி ராமையா, பிரார்தனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். குடும்பப் பின்னணி கதையாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: ரசவாதிக்கு 3 விருதுகள்! சிறந்த நடிகர் விருது பெறும் அர்ஜுன்தாஸ்!

பைசன் புதிய அப்டேட்!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பைசன் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. மாமன்னன், வாழை படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் கபடி விளையாட்டை மையமாக வைத்து பைசன் என்கிற படத்தை ... மேலும் பார்க்க

இந்தியாவில் 2% மக்கள் மட்டுமே திரையரங்குகளில் படம் பார்க்கிறார்கள்: ஆமீர் கான்

இந்தியாவில் நடைபெறும் வேவ்ஸ் சந்திப்பில் நடிகர் ஆமிர் கான் திரையரங்குகளில் அதிகமாக முதலீட்டை அளிக்க வேண்டும் எனப் பேசியுள்ளார். 60 வயதாகும் ஆமிர் கான் சினிமாவில் நடிப்பதில் இருந்து தற்காலிகமாக விலகி இ... மேலும் பார்க்க

கார்த்தி நடிப்பில் ஹிட் - 4!

நடிகர் கார்த்தி ஹிட் - 4 படத்தில் நடிக்கவுள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் நடிகர் நானி நடித்த ஹிட் - 3 திரைப்படம் நேற்று (மே. 1) திரையரங்குகளில் வெ... மேலும் பார்க்க

கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

கேதார்நாத் கோயிலின் நடை இன்று கோலாகலமாகத் திறக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உத்தரக்கண்ட் மாநிலத்தில் இமயமலை தொடரில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் 12 ஜோதிர்லிங்களில்... மேலும் பார்க்க