GK dairy: கும்பகோணத்தில் நடைபெற்ற தமிழ் பால் நிறுவனத்தின் முப்பெரும் விழா!
கும்பகோணம் அருகே உள்ள குறிச்சியைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஜி கே டெய்ரியின் 50வது ஆண்டு விழா, தமிழ் பால் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழாவும், தமிழ் பாலின் ( GK Dairy -Tamil Milk ) புதிய அவதார அறிமுக விழா என முப்பெரும் விழா கும்பகோணம் தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது.
விழாவில் தமிழ் பாலின் நிறுவனமான ஜி.கே. டெய்ரி நிர்வாக இயக்குனர் ஜி. கண்ணன் வரவேற்றார். விழாவில் சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் என். காமகோடி தமிழ் பால் முப்பெரும் விழாவில் பங்கு பெறாத நிலையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தது ஒலி, ஒளி மூலம் காட்டப்பட்டது. அதில் அவர் தமிழ் பாலோடு 50 ஆண்டுகால நெருக்கம் இருப்பதாகவும் பிறந்தது முதல் இன்று வரை தமிழ் பால் தான் உபயோகப்படுத்துவதாகவும் வாழ்த்தி பேசினார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ. ராமலிங்கம் குத்துவிளக்கேற்றினார். தமிழ் பாலின் புதிய பரிமாணங்களை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், ராஜ்யசபா உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். தமிழ் பாலின் புதிய தயாரிப்புகள் மற்றும் புதிய தமிழ்ப்பால் விநியோக மைய மாடல்-ஐ க. அன்பழகன் எம். எல். ஏ. மற்றும் மாநகராட்சி துணை மேயர் சு.ப. தமிழழகன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
தமிழ் பால் நிறுவனத்தின் முப்பெரும் விழா குறித்தும் புதிய பரிணாமங்கள் குறித்தும் தமிழ் பால் தயாரிப்புகள் குறித்தும் செயல் இயக்குனர் ஜி. கே. தியாகராஜன் விளக்கிப் பேசினார். முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் அமைச்சர், எம். பி, எம். எல். ஏ., முன்னாள் எம்பி உள்ளிட்ட அனைவரும் தமிழ் பாலின் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வைத்தனர்.
விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழ் பால் விநியோகஸ்தர்கள் மற்றும் பால் கொள்முதல் நிலைய மைய பொருப்பாளர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட தமிழ் பால் விநியோகஸ்தர்கள், மைய பொருப்பாளர்களுக்கும் மற்றும் நிறுவன ஊழியர்கள் என அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டனர்.