செய்திகள் :

SRM: பிரைம் மருத்துவமனை சென்னை ராமாபுரத்தில் தொடக்கம்

post image

தமிழ்நாட்டின் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, தன்னுடைய நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் மூலம் கல்வி மற்றும் மருத்துவத்தில் பெயர் பெற்ற SRM குழுமம், ராமாபுரத்தில் முதன்மையான பல்நோக்கு மருத்துவமனையான SRM பிரைம் மருத்துவமனையைத் திறந்திருக்கிறது. பல்துறை சிறப்பு மருத்துவமனையாக அமைந்துள்ள இந்த மருத்துவமனை, நோயாளிகளை மையப்படுத்தி மேம்பட்ட மருத்துவ சிகிச்சையை வழங்கும் நோக்கில் செயல்படும் புதிய மருத்துவமனைகளின் சங்கிலியில் குழுமம் இணைவதைக் குறிக்கிறது.

300-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையை, அதன் தலைவர் டாக்டர் R. சிவகுமார், துணைத் தலைவர் திருமதி. கீதா சிவகுமார் மற்றும் இணைத் தலைவர் திரு. 5. நிரஞ்சன் ஆகியோர் முன்னிலையில் SRM குழுமத்தின் நிறுவனரான வேந்தர் டாக்டர் T.R. பாரிவேந்தர், திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் T.R. பாரிவேந்தர், "SRM குழுமம் நீண்ட காலமாக கல்வியில் முன்னோடியாக இருந்து வரும் அதே வேளையில், சுகாதாரப் பராமரிப்பிலும் எங்கள் கவனத்தை நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறோம். இந்த முதன்மையான பல்நோக்கு மருத்துவமனை, உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதில் ஒரு முக்கிய மைல் கல்லாக விளங்கும்.

நோயாளியை மையைப்படுத்திய அணுகுமுறையுடன் வடிவமைக்கப்பட்ட இந்த மருத்துவமனையில், 75-க்கும் மேற்பட்ட அதிநவீன சிறப்பு ICU/CCU/NICU/PICU படுக்கைகள், ஏழு மேம்பட்ட மாடுலர் அறுவை சிகிச்சை அரங்குகள், சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களுக்கும் ஏற்ற 30-க்கும் மேற்பட்ட சிறப்பு சிகிச்சைகள், டிஜிட்டல் X-ரே, AI மூலம் இயங்கும் CT ஸ்கேன், மேம்பட்ட 3T MRI, இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி மற்றும் முழுமையான மற்றும் விரிவான ஆய்வக சேவைகள் உள்ளிட்ட முழுமையான நோயறி வசதிகளைக் கொண்டுள்ளது.

ராமாபுரம் மற்றும் திருச்சி SRM குழுமத்தின் தலைவரான டாக்டர் R. சிவகுமார் பேசும்போது, "அதிநவீன உள்கட்டமைப்பு, மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பத்தின் உதவியோடு ஆதார அடிப்படையிலான விரிவான சிகிச்சையை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்றார்.

மருத்துவமனையின் பின்னணியில் உள்ள சிகிச்சை நெறிமுறைகளைப் பற்றி இதன் துணைத் தலைவரான திருமதி. கீதா சிவகுமார் பேசுகையில்: "SRM பிரைம் மருத்துவமனையில் அளிக்கப்படும் பராமரிப்பு பிரிவின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும் என்று சிந்தித்தோம் நோயாளியை மையப்படுத்திய அணுகுமுறை மற்றும் குணப்படுத்துதலை ஆதரிக்கும் முழுமையான சிகிச்சை செயல்முறையுடன். ஒவ்வொரு நோயாளியையும் தொட்டு, தாங்கள் கவனித்துக் கொள்ளப்படுவதாக அவர்களை உணர வைப்பதே எங்கள் இலக்கு" என்றார்.

பரந்த தொலைநோக்குப் பார்வையை கோடிட்டுக் காட்டிய இணைத் தலைவர் திரு. S. நிரஞ்சன் பேசும்போது: "தமிழ்நாட்டிற்கான சுகாதாரப் பராமரிப்பு மறுவரையறை செய்வதில் SRM பிரைம் மருத்துவமனை ஒரு துணிவுமிக்க முயற்சியாகும். உலகத்தரம் வாய்ந்த திறமை, உட்கட்டமைப்பு மற்றும் விளைவுகளின்மீது கவனம் செலுத்துவதன் மூலம், ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், அதனால் எம்மிடம் வரும் நோயாளிகளின் வாழ்க்கையை மீட்டெடுப்பதும்தான் எங்களுடைய குறிக்கோள். இந்த முதன்மை மருத்துவமனை, அதிநவீன தொழில்நுட்பம், ஸ்மார்ட்டான உட்கட்டமைப்பு மற்றும் பரிவுமிக்க பராமரிப்பு ஆகியவற்றை ஒரே கூரையின் கீழ் தருகிறது' என்றார்.

தோற்றத்திலும் உணர்விலும் சிறந்த சூழலை வழங்கும் இந்த மருத்துவமனையில், பொது மற்றும் இரட்டைப்படுக்கை அறைகள், மலிவு விலையில் தனியார், டீலக்ஸ் மற்றும் சூட் அறைகள், டிஜிட்டல் கஃபே, பிரீமியம் ஓய்வறைகள், தொழில்நுட்ப உதவியுடன் கூடிய அறை பராமரிப்பு மற்றும் இன்னும் பல வசதிகள் உள்ளன.

SRM பிரைம் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. P. சிவா அவர்கள், ஒரு வார கால சுகாதார மேளாவை தொடங்குவதாக அறிவித்தார்: "எங்கள் திறப்பு விழாவைக் கொண்டாடவும், உள்ளூர் சமூகத்துடன் இணையவும், இலவச பரிசோதனைகள், ஆலோசனைகள் மற்றும் ஆரோக்கிய அமர்வுகளை வழங்கும் ஒரு சுகாதார மேளாவை ஒரு வார காலத்திற்கு நாங்கள் நடத்துகிறோம். அனைவருக்கும் தரமான சுகாதார சேவை என்பது கிடைக்கக்கூடியதற்கு ஒரு படியாக இது அமையும் ! என்றார்.

இதைத் தொடங்கியிருப்பதன் மூலம், SRM பிரைம் மருத்துவமனை, தொழில்நுட்பம், சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் நோயாளிகள் விரும்பும் பரிவுமிக்க பராமரிப்பு ஆகியவை இணைந்த சூழல்கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி பராமரிப்பினை வழங்கவுள்ளது.

Aswins: தஞ்சாவூரில் 42 வது கிளையைத் தொடங்கிய அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ்

பெரம்பலூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனம் தனது 42-வது கிளையை தஞ்சாவூரில் ( Aswins sweets Tanjore )கோலாகலத்துடன் தொடங்கி இருக்கிறது.இந்நிகழ்ச்சியில் அஸ்வின்ஸ... மேலும் பார்க்க

GK dairy: கும்பகோணத்தில் நடைபெற்ற தமிழ் பால் நிறுவனத்தின் முப்பெரும் விழா!

கும்பகோணம் அருகே உள்ள குறிச்சியைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஜி கே டெய்ரியின் 50வது ஆண்டு விழா, தமிழ் பால் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழாவும், தமிழ் பாலின் ( GK Dairy -Tamil Milk ) புதிய அவதாரஅறிமுக ... மேலும் பார்க்க

GRT: 'இது வளத்திற்கான வாக்குறுதி' - ஜிஆர்டி ஜுவல்லர்ஸுடன் அட்சய திருதியை கொண்டாடுங்கள்!

1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், அதன் எளிய தொடக்கத்திலிருந்து இன்றளவும் நகைத் துறையின் அசைக்கமுடியாத மிக நம்பகமான பெயர்களில் முதன்மையாக ஒன்றாக வளர்ந்துள்ளது. 60 ஆண்டுகளை கடந்த பாரம்பரியத... மேலும் பார்க்க

சர்பத் விளம்பரத்தில் மத வெறுப்பு பிரசாரம்; பாபா ராம்தேவ்வின் பதஞ்சலிக்குக் குட்டு வைத்த நீதிமன்றம்

யோகா குரு பாபா ராம்தேவ் அனைத்து வகையான மருத்துகள், வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரித்து பதஞ்சலி என்ற நிறுவனப் பெயரில் விற்பனை செய்து வருகிறார்.ஆனால் அவரது தயாரிப்புகள் குறித்து தவறாக விளம்பரம் செய்து ... மேலும் பார்க்க

விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு புவிசார் குறியீடு - விவசாயிகள் மகிழ்ச்சி!

புவிசார் குறியீடு (GI) என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படுவதாகும். இதன்மூலம், அந்த பொருள் அந்த பகுதியில் பாரம்பரியமாக தயாரிக்கப்படுவத... மேலும் பார்க்க

'பிசினஸ் தொடங்கப் போறீங்களா?' - இந்த 10 கேள்விகளுக்கு பதில் ப்ளீஸ்!

பிசினஸ் - சட்டென எடுக்கும் ஒரு முடிவு அல்ல. பிசினஸ் தொடங்குவதாக முடிவு எடுத்தால் அதற்காக பக்காவாக நம்மை நாமே தயார் செய்துகொள்ள வேண்டும். அதற்கு உங்களை நீங்களே கேட்டுகொள்ள வேண்டிய 10 கேள்விகளை சொல்கிறா... மேலும் பார்க்க