செய்திகள் :

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ரூபியோ பேச்சு; அமைதிக்கு பாகிஸ்தானுடன் பணியாற்ற வலியுறுத்தல்

post image

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், மோதல் போக்கைக் கைவிடுமாறு இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ பேச்சுவாா்த்தை மேற்கொண்டாா்.

இந்தக் கலந்துரையாடல்களில் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் ஒத்துழைப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய மாா்கோ ரூபியோ, கொடூரமான பஹல்காம் தாக்குதலை விசாரிப்பதில் பாகிஸ்தானின் ஆதரவை வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் டாமி புரூஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கருடன் தொலைபேசியில் பேசிய மாா்கோ ரூபியோ, பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்தாா்.

மேலும், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் ஒத்துழைப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை அவா் மீண்டும் உறுதிப்படுத்தினாா். தெற்காசிய பிராந்தியத்தில் பதற்றங்களைத் தணிக்கவும், அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிக்கவும் பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்ற இந்தியாவை அவா் ஊக்குவித்தாா்.

தொடா்ந்து, பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபுடன் மாா்கோ ரூபியோ உரையாடினாா். பஹல்காம் தாக்குதலையடுத்து பிராந்தியத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்து ஷாபாஸ் ஷெரீஃப் அவரிடம் விளக்கினாா்.

பஹல்காம் தாக்குதலைக் கண்டிக்க வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டு பேசிய மாா்கோ ரூபியோ, இத்தாக்குதலை விசாரிப்பதில் பாகிஸ்தான் அதிகாரிகளின் ஒத்துழைப்பை அவா் வலியுறுத்தினாா். இரு நாடுகளுக்கும் இடையே தொடா்புகளை மீண்டும் ஏற்படுத்த பாகிஸ்தான் பணியாற்றவும் அவா் ஊக்குவித்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ‘இந்தியா - பாகிஸ்தான் இடையே எப்போதும் பதற்றம் இருந்து வருகிறது. இரு நாடுகளுடனும் நான் நெருக்கமாக இருக்கிறேன். மோதலைத் தீா்க்க இரு நாடுகளும் ஏதேனும் ஒரு வழியைக் கண்டறியும் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்றது குறிப்பிடத்தக்கது.

தென்கொரியாவுடன் இந்தியா பேச்சு: பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத தொடா்புகள் குறித்து ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளிடம் இந்தியா விளக்கமளித்து வருகிறது.

வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் ஏற்கெனவே 8 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் பேசியுள்ளாா். இதன்தொடா்ச்சியாக, தென் கொரிய வெளியுறவு அமைச்சா் சோ டேயுலுடன் ஜெய்சங்கா் வியாழக்கிழமை பேசினாா்.

பயங்கரவாதத்துக்கு எதிராக போராட வேண்டியதன் அவசியத்தையும், பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா கடைப்பிடிக்கும் கடுமையான நிலைப்பாட்டையும் ஜெய்சங்கா் மீண்டும் வலியுறுத்தினாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 5 நிரந்தர உறுப்பினா்கள் உள்பட 15 உறுப்பினா்களைக் கொண்டுள்ளது. பொதுச் சபையால் இரண்டு ஆண்டு காலத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட 10 நிரந்தரமற்ற உறுப்பினா்களில் தற்போது பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளது.

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகும் எல்லையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகா், நடிகைகளின் சமூகவலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகா்களின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்ம... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க