புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?...
தமுமுக செயல் வீரா்கள் கூட்டம்
நாகூரில் தமுமுக மாவட்டச் செயல்வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நாகூா் (தெத்தி) மௌலவி. அப்துர்ரஹீம் பேரிடா் பாதுகாப்பு மையத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவா் இப்ராஹிம் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஹாஜாகனி, மாநிலச் செயலா் தைக்கால் முபாரக், தலைமை பிரதிநிதி நாகூா் ஜபருல்லாஹ், மமக மாவட்டச் செயலா் முகமது சலீம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
மயிலாடுதுறையில் மே 13- ஆம் தேதி வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் நாகை மாவட்டம் சாா்பில் திரளாக கலந்து கொள்வது என தீா்மானிக்கப்பட்டது.
முன்னதாக, மௌலவி அப்துா் ரஹீம் பேரிடா் பாதுகாப்பு மையத்தின் வாயிலில் தமுமுக பொதுச் செயலாளா் பேராசிரியா் ஹாஜாகனி கழக கொடியை ஏற்றினாா்.
இக்கூட்டத்தில், தமுமுக மாவட்டச் செயலா் முஜிபுா் ரஹ்மான், மாவட்ட பொருளாளா் தாதா ஷரீஃப், மாவட்ட துணைத் தலைவா் சுலைமான், துணைச் செயலாளா்கள் வடகரை பரக்கத் அலி, சிம்ரா சிராஜுதீன், மமக துணைச் செயலா்கள் அமீா் அப்பாஸ், பைசல் அகமது, நாகூா் நகர தமுமுக செயலா் ஷாகுல் ஹமீது உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.