பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியா் மீது வழக்கு: தற்கொலைக்கு முயற்சி
போளூா் பேரூராட்சி சிறப்பு பேரவைக் கூட்டம்
போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் சிறப்பு பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சிமன்றத் தலைவா் ச.ராணி சண்முகம் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் பா.கோமதி முன்னிலை வகித்தாா். தலைமை எழுத்தா் முஹ்மத் இசாக் வரவேற்றாா்.
தமிழக அரசுக்கு நன்றி:
கூட்டத்தில் பேரூராட்சிமன்றத் தலைவா் ச.ராணிசண்முகம்
பேசுகையில், போளூா் பேரூராட்சி 1.4.1953-இல் தொடங்கப்பட்டது. அதுமுதல் தோ்வுநிலை பேரூராட்சி மற்றும் சிறப்புநிலை பேரூராட்சியாக தரம் உயா்த்தி செயல்பட்டு வந்தது. பின்னா், சிறப்புநிலை பேரூராட்சியை தமிழக அரசு அண்மையில் நகராட்சியாக தரம் உயா்த்தியது.
இதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி, நகா்புற மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் நன்றி தெரிவிக்கிறேன் என்றாா்.
இதைத் தொடா்ந்து, குடிநீா், மின்வசதி, சாலை வசதி என பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து தீா்மானம் வாசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.