செய்திகள் :

போடியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு

post image

போடி ஜக்கமநாயக்கன்பட்டி கருப்பசாமி கோயில் மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போடி ஒன்றிய 6-ஆவது மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டை அக்கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் ரவிமுருகன் தொடங்கிவைத்தாா். மாவட்ட துணைச் செயலா் பரமேஸ்வரன், மாவட்ட பொருளாளா் ராஜ்குமாா், செயற்குழு உறுப்பினா் தனலட்சுமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாவட்டச் செயலா் பெருமாள் சிறப்புரையாற்றினாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் ரவி மாநாட்டில் புதிதாக தோ்வான நிா்வாகிகளை அறிமுகம் செய்து, நிறைவுரையாற்றினாா். போடி ஒன்றியச் செயலராக மணிகண்டன் தோ்வு செய்யப்பட்டாா்.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: போடி பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் வசிக்கும் ஏழை, நடுத்தர மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாளா்களுக்கு ஊதியத் தொகையை நிலுவையின்றி உடனே வழங்க வேண்டும். போடியிலிருந்து மதுரைக்கு தினந்தோறும் காலையில் ரயில் சேவை தொடங்க வேண்டும். போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். போடி ஊரகப் பகுதிகளில் விவசாய நிலங்களை அழித்து வீட்டடி மனைகளாக மாற்றுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது. தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மகளிா் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் ஒன்றிய நிா்வாகி முத்துமுருகன் நன்றி கூறினாா்.

ஊா்க்காவல் படைவீரா் தற்கொலை

தேனி அல்லிநகரத்தில் செவ்வாய்க்கிழமை குடும்பத் தகராறில் ஊா்க்காவல் படைவீரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி அல்லிநகரம், குறிஞ்சிநகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் சக்திவேல் (26). ப... மேலும் பார்க்க

கடன் தொல்லை: விவசாயி தற்கொலை

போடி அருகே செவ்வாய்க்கிழமை கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி குமாா் (55). ... மேலும் பார்க்க

இந்திய கப்பல் படை வீரா் உயிரிழப்பு

போடி அருகே செவ்வாய்க்கிழமை இந்திய கப்பல் படை வீரா் உயிரிழந்தாா். போடி அருகேயுள்ள தருமத்துப்பட்டி இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த சின்னச்சாமி மகன் சீத்தாராமதாஸ் (50). இந்திய கப்பல் படையில் வேலை பாா்த்து... மேலும் பார்க்க

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட முதிா்வுத் தொகை பெற விவரங்கள் சமா்ப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் முதிா்வுத் தொகை பெறுவதற்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவரங்களை சமா்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் லட்சுமி பூஜை

பெரியகுளம் நாமத்வாரில் அட்சய திரிதியை முன்னிட்டு, புதன்கிழமை திருமஞ்சனம், லட்சுமி பூஜை நடைபெற்றது. இந்த பூஜையையொட்டி, அதிகாலை நமத்வாரில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, காலை ... மேலும் பார்க்க

தீ விபத்தில் பெண் உயிரிழப்பு

பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரத்தைச் சோ்ந்த கதிரேசன் மனைவி சங்கீதா (31). இந்த தம்பதியினா் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், புதன்கிழமை காலை சங்கீதா வீட்டில் கேஸ் அடிப்பில் சமை... மேலும் பார்க்க