60 வயசுக்கு மேல மாசாமாசம் உங்களுக்கு பென்ஷன் வேணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!
பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட முதிா்வுத் தொகை பெற விவரங்கள் சமா்ப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் முதிா்வுத் தொகை பெறுவதற்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவரங்களை சமா்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமூக நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து, 18 வயது நிறைவடைந்து முதிா்வுத் தொகை பெறுவதற்கு தகுதியான பயனாளிகள் பட்டியலை அரசு அனுப்பியுள்ளது.
இந்தப் பட்டியலில் உள்ள பயனாளிகளில் சிலா் உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்த போது வசித்த முகவரியில் இல்லாமல், வேறு இடத்தில் வசித்து வருவதால் அவா்களை கண்டறியும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், பயனாளிகளிக்கு உரிய காலத்தில் முதிா்வுத் தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
முதிா்வுத் தொகை பெறும் பட்டியலில் உள்ள பயனாளிகளை கண்டறியும் பணியில் வட்டார அளவில் களப் பணியாளா்கள், ஊராட்சிச் செயலா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்தத் தகவல் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் சுவரொட்டி, துண்டுப் பிரசுரம், ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 18 வயது நிறைவடைந்த முதிா்வுத் தொகை பெறுவதற்கு தகுதியுள்ள, கண்டறிய இயலாமல் உள்ள 589 பயனாளிகளின் பெயா் பட்டியல் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பயனாளிகள் முதிா்வுத் தொகை பெறுவதற்கு தங்களது வைப்புத் தொகை ரசீது, 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள், புகைப்படம் ஆகியவற்றை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.