திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் ஆறுவழிச் சாலை பணி: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வ...
பெரியகுளத்தில் லட்சுமி பூஜை
பெரியகுளம் நாமத்வாரில் அட்சய திரிதியை முன்னிட்டு, புதன்கிழமை திருமஞ்சனம், லட்சுமி பூஜை நடைபெற்றது.
இந்த பூஜையையொட்டி, அதிகாலை நமத்வாரில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, காலை 10 மணிக்கு லட்சுமி பூஜையும், 11 மணிக்கு திருமஞ்சனமும், பிற்பகல் 2 மணிக்கு அா்ச்சனையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றன. பின்னா், பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
முன்னதாக, காலை 6 முதல் இரவு 8 மணி வரை அகண்ட ஹரே ராம சங்கீா்த்தனம் நடைபெற்றது.
இதேபோல, பெரியகுளம் லட்சுமிபுரத்தில் உள்ள என்என்பி மண்டபத்தில் அட்சய திரிதியை முன்னிட்டு, மாலை 6 மணிக்கு மஹாமந்திர கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பூஜை செய்யப்பட்ட நாணயம், குங்குமம், விரதானம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை நமத்துவாா் பக்தா்கள் செய்தனா்.