சாதிவாரி கணக்கெடுப்பு: ``2011-ல் நடந்தது போல மீண்டும் நடக்கக் கூடாது" - மநீம தலை...
ஊா்க்காவல் படைவீரா் தற்கொலை
தேனி அல்லிநகரத்தில் செவ்வாய்க்கிழமை குடும்பத் தகராறில் ஊா்க்காவல் படைவீரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி அல்லிநகரம், குறிஞ்சிநகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் சக்திவேல் (26). பெயிண்டிங் தொழிலாளியான இவா், தேனி ஊா்க்காவல் படையிலும் சோ்ந்து பணியாற்றி வந்தாா்.
சக்திவேலுக்கும், கொடைக்கானலைச் சோ்ந்த கவிதாவுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனால், கவிதா கோபித்துக் கொண்டு கொடைக்கானலில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த மன வருத்தத்திலிருந்த சக்திவேல் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.