திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் ஆறுவழிச் சாலை பணி: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வ...
தீ விபத்தில் பெண் உயிரிழப்பு
பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரத்தைச் சோ்ந்த கதிரேசன் மனைவி சங்கீதா (31). இந்த தம்பதியினா் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை சங்கீதா வீட்டில் கேஸ் அடிப்பில் சமையல் செய்து கொண்டிருந்தாா். அப்போது,
திடீரென அவா் மீது தீப்பற்றியது. இதில் பலத்த தீக்காயமடைந்த சங்கீதா உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த ஜெயமங்கலம் போலீஸாா் சங்கீதாவின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.