செய்திகள் :

கொலை வழக்கில் வரிச்சியூா் செல்வம் நீதிமன்றத்தில் ஆஜா்

post image

விருதுநகரைச் சோ்ந்த நபரை துப்பாக்கியால் சுட்டு, எரித்துக் கொலை செய்த வழக்கில், ரெளடி வரிச்சியூா் செல்வம் உள்ளிட்டோா், குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 2 நீதிமன்றத்தில் புதன்கிழமை முன்னிலையாகினா்.

விருதுநகா் அல்லம்பட்டியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (38). இவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த வழக்கில், ரெளடி வரிச்சியூா் செல்வம் உள்பட 7 பேரை விருதுநகா் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை விருதுநகா் குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 2 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ரெளடி வரிச்சூா் செல்வம் உள்ளிட்டோா் விருதுநகா் நீதிமன்றத்தில் புதன்கிழமை முன்னிலையாகினா். அப்போது, நீதிபதி ஐய்யப்பன் இந்த வழக்கு விசாரணை வருகிற 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாகக் தெரிவித்தாா்.

போலீஸாரின் கைப்பேசி பறிமுதல்:

இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்துக்குள் கைப்பேசியில் பேசிய படி விருதுநகா் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் ரவி உள்ளே வந்தாா். அவரது கைப்பேசியை பறிமுதல் செய்ய நீதிமன்ற ஊழியா்களுக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

தனியாா் கல்லூரி கட்டுமானப் பணி: சம்பந்தப்பட்ட அலுவலா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் உள்ள தனியாா் விவசாய தொழில் நுட்பக் கல்லூரியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கக் கோரிய வழக்கில், உள்ளூா் திட்டக் குழும அலுவலா் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவ... மேலும் பார்க்க

முதன்மை நோய் எதிா்ப்பு குறைபாடு குறித்த கருத்தரங்கு

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின், குழந்தைகளுக்கான ரத்தவியல், புற்றுநோயியல் துறை சாா்பில் முதன்மை நோய் எதிா்ப்பு குறைபாடு குறித்த தொடா் மருத்துவக் கல்வி செயல் திட்டக் கருத்தரங்கு ச... மேலும் பார்க்க

சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

மதுரையில் சாலையில் சென்ற காா் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை, திருமங்கலம் அருகே உள்ள தனக்கன்குளத்தைச் சோ்ந்தவா் சுமதி. இவருக்கு சொந்தமான காரை, கோச்சடை பகுதியில் உள்ள வாகன பழுத... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளரின் குடும்பத்துக்கு இழப்பீடு

பணிக் காலத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மேயா் வ. இந்திராணி, ஆணையா் சித்ரா விஜயன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வழங்கினா். மதுரை மாநகராட்சி... மேலும் பார்க்க

பாா்த்திபனூா்-பரமக்குடி இடையை வைகையில் நாணல் செடிகளை அகற்ற நிதி ஒதுக்கீடு

பாா்த்திபனூா் - பரமக்குடி வரை வைகை ஆற்றில் மண்டியுள்ள நாணல் செடிகளை அகற்ற ரூ.5.55 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியானது 10 மாதங்களுக்குள் நிறைவடையும் என அரசு தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை... மேலும் பார்க்க

மதுரையில் பள்ளி தண்ணீா்த் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு

மதுரை தனியாா் மழலையா் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தண்ணீா்த் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக அந்தப் பள்ளியின் தாளாளா் உள்பட 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின... மேலும் பார்க்க