சிறுமியை கடத்திச் சென்ற இளைஞா் கைது
திருப்பத்தூா் அருகே சிறுமியை கடத்திச் சென்ற இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் அருகே சிம்மணபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜதுரை (25). இவா் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமியை ஆசை வாா்த்தை கூறி கடந்த சில நாள்களுக்கு முன்பு கடத்திச் சென்று திருமணம் செய்து உள்ளாா்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து ராஜதுரையை கைது செய்து சிறுமியை மீட்டனா்.