டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து 84.33 ஆக முடிவு!
`சமாதான தூது' - ட்ரம்பை சந்தித்த அதானி குழும அதிகாரிகள்; சோலார் ஒப்பந்த மோசடி வழக்கு ரத்து ஆகுமா?
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 'அடுத்த 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் கிடைக்க உள்ள சோலார் ஒப்பந்தத்தைப் பெற அதானி இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கினார் என்றும், இந்த ஒப்பந்தத்தைக் காட்டி அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து பணம் பெற்றார்' என்றும் அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி குழுமத்தின் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது.
ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில் இருந்து மீண்டு வந்துகொண்டிருந்த அதானி குழுமத்தின் மீது, இந்த வழக்கு பெரும் இடியாக இறங்கியது. இதனால், அந்தக் குழுமத்தின் பங்குகள் அப்போது சரிந்தன.
இந்த வழக்கு இப்போதும் அமெரிக்காவில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த நிலையில், இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்பை, அதானி குழுமத்தின் அதிகாரிகளின் குழு இந்த வழக்கு குறித்து சந்தித்துள்ளது. இந்த சந்திப்பு, இந்த சோலார் மோசடி வழக்கை ரத்து செய்வது குறித்தானது என்று கூறப்படுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நடந்து வருகிறது. ஆனால், இப்போது தான் அது ஓரளவு அதானிக்கு சாதகமான நிலையில் செல்கிறது.
அதானி குழுமம் முன்வைக்கும் வாதம் என்ன?
இந்தக் குற்றச்சாட்டு ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிராக உள்ளது என்றும், அதனால், இந்த வழக்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ட்ரம்பிடம் நடத்தும் பேச்சுவார்த்தையில் அதானி குழும அதிகாரிகள் தங்களது வாதத்தை முன்வைத்துள்ளனர்.
இந்த வாதம் கைகொடுக்குமா? அதானி குழுமத்தின் மீது இருக்கும் வழக்கு ரத்து செய்யப்படுமா? இனி வரும் அடுத்தடுத்த நகர்வுகளில் தெரிந்துகொள்ளலாம்.