செய்திகள் :

NEET exam: `பூணூல் கூடாது' மாணவனுக்கு நடந்த சம்பவம்; கர்நாடகாவில் வெடித்த போராட்டம்..

post image

இந்தியா முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது.

மாணவிகளின் ஆடைகளில் இருந்த பொத்தான்களை அகற்றியதாகவும், மூக்குத்தி, தாலி போன்றவற்றை கழற்றச் சொன்னதாகவும் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், கர்நாடகாவில் புதிய போராட்டம் ஒன்று வெடித்துள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த கலபுர்கியில் உள்ள ஒரு பள்ளி, நீட் தேர்வு மையமாக செயல்பட்டது. அந்தப் பள்ளிக்கு தேர்வு எழுத வந்த ஸ்ரீபாத் பாட்டீல் என்ற மாணவர் அணிந்திருந்த பூணூலை கழற்றுமாறு கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம்
போராட்டம்

இது குறித்து அந்த மாணவனின் தந்தை கூறுகையில், "ஸ்ரீபாத் பாட்டீல் தேர்வு எழுத அரை மணி நேரம் தாமதமாகச் சென்றார். அவரது பூணூலை கழற்றச் சொல்லி, தேர்வு அறையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார்.

நான் வெளியே நின்று கொண்டிருந்தேன். என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. அதனால், அவர் தனது பூணூலை என் கையில் கொடுத்துவிட்டு, தேர்வு எழுதச் சென்றார்," என்று தெரிவித்தார்.

மாணவனின் பூணூலை கழற்றச் சொன்ன தகவல் பரவியதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் உள்ள பிராமண சமூகத்தைச் சேர்ந்த பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், கர்நாடகாவின் எதிர்க்கட்சியான பாஜகவும் இந்தச் சம்பவம் குறித்து போராட்டம் நடத்தியது.

NEET: ``மூக்குத்தி, தோடில் பிட் எடுத்துச் செல்ல முடியுமா? தமிழ்நாட்டுக்கு ஏன் இந்த கொடுமை'' - சீமான்

செய்தியாளர்களை இன்று சந்தித்த சீமான் நீட் தேர்வு கட்பாடு குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார்.நீட் தேர்வு குறித்து குறித்து பேசிய அவர், “ நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் பெறப்பட்ட கையெழுத்துகள் ... மேலும் பார்க்க

`சமாதான தூது' - ட்ரம்பை சந்தித்த அதானி குழும அதிகாரிகள்; சோலார் ஒப்பந்த மோசடி வழக்கு ரத்து ஆகுமா?

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 'அடுத்த 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் கிடைக்க உள்ள சோலார் ஒப்பந்தத்தைப் பெற அதானி இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கினார் என்றும், இந்த ஒப்பந்தத்தைக் காட்டி அமெரிக்க... மேலும் பார்க்க

எம்எல்ஏ ரவி கைது: ``இந்த பூச்சாண்டிகளுக்கு அதிமுகவினர் பயப்படுபவர்கள் அல்ல..'' - இபிஎஸ் கண்டனம்

அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ ரவி கைது செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.இதுத்தொடர்பாக பேசியிருக்கும் அவர், “அரக்கோணம் MRF அண்ணா தொழிற்சங்கம் சார்பில் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்... மேலும் பார்க்க

Doctor Vikatan: பாதாமை எப்படிச் சாப்பிடணும்? ஊறவைத்து தோலுரித்தது, வறுத்தது, பச்சையாக.. எது சரி?

Doctor Vikatan:பாதாம் பருப்பு உள்ளிட்ட நட்ஸ் வகைகளை எப்படிச் சாப்பிட வேண்டும்... பாதாமை ஊறவைத்து தோல் நீக்கிதான் சாப்பிட வேண்டுமா... இது எல்லா நட்ஸுக்கும் பொருந்துமா... பேலியோ டயட்டில் 100 பாதாம் எல்ல... மேலும் பார்க்க

``அவரது மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது..'' - பத்மஸ்ரீ பாபா சிவானந்த் மறைவுக்கு மோடி இரங்கல்

பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா குரு பாபா சிவானந்த் உடல்நலக் குறைவால் வாரணாசியில் நேற்று (மே 3) இரவு காலமானார். 128 வயதான பாபா சிவானந்துக்கு, ஏப்ரல் 30 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. இத... மேலும் பார்க்க

Neet: ஆடையில் நிறைய பட்டன் இருந்ததால் தேர்வு எழுத மறுப்பு.. உடனே பெண் போலீஸ் செய்த நெகிழ்ச்சி செயல்!

2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு ஒரே கட்டமாக இன்று (மே 4) நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர். நாடு முழுவதும் 23 லட்சம் மாண... மேலும் பார்க்க