பிரதமருடன் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை!
வக்ஃப் சட்டம் குறித்து வதந்திகளைப் பரப்புகிறது காங்கிரஸ்: மத்திய அமைச்சர்
வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 குறித்து காங்கிரஸ் வதந்திகளைப் பரப்பி வருவதாக மத்திய அமைச்சர் பூபேந்திரா யாதவ் குற்றம் சாட்டினார்.
தில்லி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
சமூக நீதி, பொருளாதார வளர்ச்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் பாலின சமத்துவம் ஆகிய துறைகளில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளார்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம் 2025, முற்போக்கான பயணத்தின் ஒரு முக்கியமான மைல்கல் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தச் சட்டத்தின் காரணமாக இஸ்லாமியர்களின் உரிமைகள் முடிவுக்கு வரும் என்று காங்கிரஸ் வதந்திகளைப் பரப்பி வருவதாகவும், இந்தச் சட்டம் திருத்தப்பட்டது இது முதல் முறை அல்ல என்றும் அவர் கூறினார்.
வக்ஃப் விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை, மேலாண்மை போன்ற சில பிரச்னைகள் 2013 கடைசி திருத்தத்தில் கவனிக்கப்படாமல் இருந்தன, ஆனால் தற்போது வக்ஃப் திருத்தச் சட்டம் 2025-ல் கவனிக்கப்பட்டுள்ளன அதேசமயம் திருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.