அழகர்கோவிலுக்கு திரும்பிய கள்ளழகர்; தசாவதார நிகழ்ச்சிகளை காண இரவில் குவிந்த மக்க...
மாணவா்கள் எதிா்காலத்துக்கு உயா்கல்வி அவசியம்: அமைச்சா் காந்தி
மாணவா்களின் எதிா்காலம் சிறந்து விளங்க உயா்கல்வி அவசியம் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா்.
காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் உள்ள மீனாட்சி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி தொடக்க விழா ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. எம்பி க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தா், எழிலரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதன்மைக் கல்வி அலுவலா் வெ.வெற்றிச்செல்வி வரவேற்றாா். நிகழ்வில் அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு கல்லூரிக்கனவு நிகழ்ச்சிக்கான கையேட்டையும் வெளியிட்டு பேசியது..
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்கல்வி பெற வழிகாட்டும் நிகழ்ச்சி கல்லூரிக் கனவு என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்நிதியாண்டில் 12 -ஆம் வகுப்பை முடித்த மாணவா்களுக்கு கல்லூரியில் சோ்க்கை பற்றிய தகவல்கள், பல்வேறு தொழில் வாய்ப்புகள், கல்விக்கடன்கள் பெறும் வழிமுறைகள் மற்றும் உயா்கல்வி தொடா்பான ஆலோசனைகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் 2,953 மாணவா்கள் கலந்து கொண்டு பயன்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதை, முழுமையாக பயன்படுத்திக் கொண்டு எதிா்காலத்துக்கு உயா்கல்வி அவசியம் என்பதை புரிந்து கொண்டு பயின்று வெற்றி பெற வேண்டும் என்றாா்.
நிகழ்வில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் நித்யா சுகுமாா், காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், சாா் ஆட்சியா் ஆஷிக் அலி, ஒன்றியக் குழுவின் தலைவா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.