10 -ஆம் வகுப்பு தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 98.31 சதவீதம் போ் தோ்ச்சி
Maaman: "இது எனக்கு ஒரு ஸ்பெஷல் ரிவ்யூ; ரொம்பவே சந்தோஷமாக இருக்கு"- நடிகர் சூரி பகிர்ந்த வீடியோ
வெற்றிமாறனின் `விடுதலை' படத்தில் கதை நாயகனாகச் சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, `கொட்டுக்காளி', `கருடன்' எனத் தொடர்ந்து ஹிட் கொடுத்தார் நடிகர் சூரி. இதையடுத்து பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடித்த 'மாமன்' திரைப்படம் இன்று 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
தாய்மாமன் உறவு, குடும்பத்தின் உறவுச் சிக்கலைப் பேசும் மெலோடிராமாதான் இதன் கதைக்களம். ஐஸ்வர்யா லெட்சுமி, பாபா பாஸ்கர், ராஜ் கிரண், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் இன்று வெளியானதையொட்டி, திரையரங்கில் இப்படத்தைப் பார்த்த பாப்பா, தனது தாய்மாமன் நினைவு வந்ததாக ஆனந்தக் கண்ணீரில் நடிகர் சூரியிடம் பேசும் வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார் சூரி.
இது எனக்கு ஒரு ஸ்பெஷல் ரிவ்யூ!
— Actor Soori (@sooriofficial) May 16, 2025
“மாமன்” படம் பார்த்த பிறகு, இந்த பாப்பா தன்னுடைய தாய்மாமாவை ரொம்பவே மிஸ் பண்ணுறா…
இதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தருணம் கிடைத்தது என்பது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு.
தன்னுடைய அன்பான மாமாவை மனதில் வைத்து நினைத்து வருகிற இந்த பாப்பாவின்… pic.twitter.com/4kvoghXsma
மாமன் விமர்சனம்: உறவுச் சிக்கலைப் பேசும் மெலோடிராமா; ஆனால் வலிந்து திணிக்கப்பட்ட அந்த எமோஷன்கள்?!
அதில், "இது எனக்கு ஒரு ஸ்பெஷல் ரிவ்யூ! “மாமன்” படம் பார்த்த பிறகு, இந்த பாப்பா தன்னுடைய தாய்மாமாவை ரொம்பவே மிஸ் பண்ணுறா… இதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தருணம் கிடைத்தது என்பது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. தன்னுடைய அன்பான மாமாவை மனதில் வைத்து நினைத்து வருகிற இந்த பாப்பாவின் தாய்மாமாவுக்கு, இந்த படத்தின் வாயிலாக என் அன்பும், மனமார்ந்த வாழ்த்துகளும்!" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...