வீடுகளின் ஜன்னலை உடைத்து பொருள்கள் திருட்டு
பெரியகுளம் அருகே வீடுகளின் ஜன்னலை உடைத்து பொருள்கள் திருடப்பட்டன.
பெரியகுளம் அருகே டி. காமக்காபட்டியில் பாரி எஸ்டேட் உள்ளது. இங்கு 292 வீடுகள் உள்ளன. இவற்றில் 8, 18 எண் கொண்ட வீடுகளின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த குளிா்சாதனப் பெட்டி, அடுப்பு, சமையல் எரிவாயு உருளை, தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டனராம். இவற்றின் மதிப்பு ரூ. 1லட்சத்து 67 ஆயிரம். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.