செயற்கை தங்கம் கண்டுபிடிப்பு? இனி தங்கம் விலை குறையுமா? | IPS Finance - 211 | S...
ஊத்துமலை பகுதியில் இன்று மின் தடை
தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் சனிக்கிழமை (மே 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி கிராமப்புற மின்பகிா்மான செயற்பொறியாளா் குத்தாலிங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஊத்துமலை உபமின் நிலையத்தில் அவசரம் மற்றும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ஊத்துமலை, சோலைசேரி, கருவந்தா, ருக்குமணியம்மாள்புரம், கீழகலங்கல், மேலகலங்கல், அமுதாபுரம், நவநீதகிருஷ்ணபுரம், பலபத்திர ராமபுரம், கங்கினாங்கிணறு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை(மே 17) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனக் கூறிப்பட்டுள்ளது.