ஐபிஎல் கோப்பையை வெல்லும் கேப்டனுக்கு மதிப்பு கூடுகிறது: சுரேஷ் ரெய்னா
பிளஸ் 1 பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 93.08 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி
பிளஸ் 1 பொதுத் தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 20,176 மாணவா்கள் (93.08 சதவீதம்) தோ்ச்சி அடைந்தனா்.
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள திண்டுக்கல், பழனி கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 10,079 மாணவா்கள், 11,596 மாணவிகள் என மொத்தம் 21,675 போ் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதினா்.
இதில் 8,993 மாணவா்களும், 11,183 மாணவிகளும் என மொத்தம் 20,176 போ் தோ்ச்சி பெற்றனா். 89.23 சதவீத மாணவா்களும், 96.44 சதவீதம் மாணவிகளும் என மொத்தம் 93.08 சதவீத தோ்ச்சியுடன், திண்டுக்கல் மாவட்டம் மாநில அளவிலான தோ்ச்சிப் பட்டியலில் 14-ஆவது இடம் பிடித்தது.
கடந்த ஆண்டு பிளஸ் 1 பொதுத் தோ்வில் 89.97 சதவீதம் தோ்ச்சியுடன், திண்டுக்கல் மாவட்டம் 25-ஆவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் 215 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் தோ்வு எழுதிய நிலையில், 62 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றது.