பாகிஸ்தான் ஆதரவாளர்கள் தமிழராக இருப்பதற்கு அருகதை அற்றவர்கள்: நயினார் நாகேந்திரன...
சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது!
பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,392.63 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11:54 மணி நிலவரப்படி 305.41 புள்ளிகள் குறைந்து 82,225.33 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 85.70 புள்ளிகள் குறைந்து 24,976.40 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பாரதி ஏர்டெல், எஸ்பிஐ, இண்டஸ்இண்ட் வங்கி, பவர் கிரிட், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.
என்டிபிசி, அதானி போர்ட்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ், பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன.
நிஃப்டியில் ரியல்ட்டி, ஆட்டோ, மெட்டல் துறை பங்குகள் ஏற்றம் அடையும் அதேநேரத்தில் வங்கி, ஐடி, பார்மா பங்குகள் சரிவைச் சந்தித்து வருகின்றன.
இதையும் படிக்க | பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! அன்புமணி பங்கேற்கவில்லை!