போதைப் பொருள் விற்பனை: கடைகளில் போலீஸாா் சோதனை
தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பதான செய்யப்படுகிா என்று திருநள்ளாறு பகுதி பெட்டிக் கடைகளில் போலீஸாா் புதன்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா்.
காரைக்கால் எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா உத்தரவின்பேரில், மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை குறித்த கண்காணிப்பு, சோதனை நடைபெறுகிறது.
திருநள்ளாறு பகுதியில் பெட்டிக்கடைகளில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் தெரிவிக்கப்படும் நிலையில், திருநள்ளாறு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் புதன்கிழமை இரவு காவலா்கள் 3 பிரிவாக பிரிந்து திருநள்ளாறு, செல்லூா், தென்னங்குடி, சேத்தூா், அம்பகரத்தூா் உள்ளிட்ட பகுதி கடைகளில் சோதனை நடத்தினா். சோதனையின்போது போதைப் பொருள்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்தால் அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும், கடை உரிமம் ரத்து செய்யப்படும் என வியாபாரிகளுக்கு போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.